நாளை நமதே இந்த நாளும் நமதே.VYC பிறந்ததும் வருடம் நான்கு கடந்துவிட்டது...விண்ணளவு சாதனை இல்லையென்றாலும் மண்ணளவில் மனிதத்தை விதைத்திருக்கிறோம்.விளைச்சலின் முடிவு அமோகமாய் இருக்கும்.வருகின்ற காலம் அதனை உரைக்கும்.உரைக்கின்ற பொது இளைய சமுதாயம் விழிக்கும்.அந்த விழிகளில் தான் உண்மையான விடியல் பிறக்கும்.... அன்றைய இளைஞர் கூட்டம் மனித விடுதலை நோக்கி பயணித்தது. இன்றைய இளைஞர் கூட்டம் மனித விடியலை நோக்கி பயணிக்கிறது. விடியும்! விடியும் போது தெரியும்!“மனிதன் மனிதனாய் மாறிய மகத்தான தருணம்.”கடந்து வந்த பாதையை திரும்பிப்பார்க்கிறோம்.கரங்கள் இணைந்து செயல்பட்டதன் விளைவு சமுதாயக் கடலில் எங்களின் நல்ல சிந்தனையின் சிறு துளியும் கலந்திருக்கிறது என்பதை பார்க்க முடிகிறது.வருகின்ற காலங்களில் எங்களின் இந்த எழுச்சிப் பயணம் இன்னும் அழுத்தமும் ஆழமும் நிறைந்ததாய் இருக்க வேண்டும்!. இருக்கும்! என்று உறுதியாய் உணர்வோடு நம்புகிறோம்.. இளைஞர்களே எங்கள் நம்பிக்கையில் தும்பிக்கையாய் இணைந்து செயல் பட வாருங்கள்.வரவேற்க நாங்கள் இருக்கிறோம்,வாழ்த்த பெரியவர்கள் இருக்கிறார்கள்,வளர்ச்சி காண இந்த சமுதாயம் இருக்கிறது..
"இளைஞனின் இரத்தம் இந்தியாவின் சத்தம் "
ஜெய்ஹிந்த்!!!
