Friday, May 20, 2011

ஒரு கூட்டுக்கிளியாக.




வெவ்வேறு இடம், வெவ்வேறு வழி, வெவ்வேறு வழக்கம் என இருந்த நாங்கள் ஒவ்வொருவரும் சேர்ந்து நாமானது விவேகன்ந்தர் யூத் கிளப் எனும் தாரக மந்திரத்தாலே.

நெரிய பார்வையோடும், கூரிய தொலைநோக்கோடும் தொடங்கினோம் எம் பயணத்தை. இதுதான் எம் திசை என்று “இளைஞர்களின் மனமாற்றத்தை நோக்கி தொடர்ந்தது எங்கள் பயணம்

நடப்பதற்கு துணிந்துவிட்டால் நந்தி  மலையும் நகர்ந்து கொள்ளும்புதுக்கவிஞனின் இச்சொற்களுக்கான அர்த்தம்,மெல்ல எம் பயணத்தை பின்னோக்கினால் நன்றே விளங்குவதை உணரலாம். 

எம் பயண காலம் ஒரு வருட்த்தைக் கடந்துவிட, இதோ விதை தூவிய கைகளோடு,விழுதுகளை கௌரவித்தோம் ,எங்கள் முதலாம் ஆண்டு விழா மார்ச் 13 2011 அன்று.

ஒரு வருட்த்திலேயே இப்படியொரு கொண்டாட்டம் தேவைதானா? என்று கேட்பவர் நீங்களென்றால்,உங்கள் கேள்விக்கு பதில்காண விளைகிறோம் 

“ஒரு மரத்தின் வளர்ச்சிக்காய்வேருக்கு நீர் ஊற்ற நமக்கு ஒரு வருட அனுபவம் வேண்டுமா என்ன?” இல்லை என்பதே உங்கள் பதிலானால்‘சியர்ஸ்’ சொல்லி எம்மோடு இணையுங்கள். ஆம் என்பதே உங்கள் பதிலானால், தாங்கள் பிறந்த அனுபவத்தை சற்றே விவரியுங்கள்..!

வெளியிலிருந்து கிடைப்பதில்லை அனுபவம். நாம் தினம் தினம் அனுபவிப்பதே அனுபவம்.   அதைப்பெற ஒரு வருடம் எங்களுக்கு
மிக நீண்ட காலமென்பதே உண்மை.

எத்தனையோ தடைகள், எத்தனையோ இன்னல்கள் இருந்தும், “அண்ணா.. நல்லாயிருக்கீங்களா?அக்கா.. எப்போ வருவீங்க?எங்கள் செல்லங்களின் இந்த கேள்வியில் மறைந்தன அத்தனை வலிகளும், வடுக்களும்..
ஒரு சில ஃபீலிங்சை உணர்ந்தால்தான் புரியும். இதுவும் அந்த வகை தான்.

 இந்த ஆண்டில் இத்தனை மன நிறைவோடு இருந்தவர் எவருமில்லை என அருதியிட்டு சொல்லுவோம்.

"ஒற்றையடி ஆரம்ப்ப் பாதைகள்தான்,நூறடியாய் காலம் மாற்றியதே.


இந்த நூறடிப்பாதைக்கு வழிகாட்டிய, காட்டிக்கொண்டிருக்கும் அத்தனை அன்பு உள்ளங்களுக்கும் நன்றிகளை உரித்தாக்குகிறோம் .

         “இளைஞர்களின் இரத்தம் , இந்தியாவின் சத்தம்”-
             இதை உணர்வோம் நித்தம் நித்தம்...





--வி. ஒய். சி யன்ஸ் காந்த் குமார்---

1 comment: